வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அடைந்திடும் வகையில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் பல்வேறு துறைகளின் சார்பாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட ஆசாகுளத்தில் நரிக்குறவர்கள் வசிக்கும் இருப்பிடத்தில் 100 சதவீதம் வாக்களிப்ப தன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சி.பழனி தலைமை தாங்கி, தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, 100 சதவீதம் வாக்களிப்போம் மற்றும் தேர்தல் நாள் அடங்கிய டாலரை மணிகளில் கோர்த்து நரிக்குறவர்களுக்கு அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, நரிக்குறவர்களில் முதல் தலை முறை வாக்காளர்களுக்கு கிரீடம் சூட்டி வாக்களிப்பதனால் ஏற் படும் நன்மைகள் மற்றும் தேசத்தின் ஜனநாயக கடமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் கலெக்டர் சி.பழனி கூறுகையில், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களாகிய நீங்களும் இச்சமூகத்தில் ஓர் அங்கம். எனவே ஒவ்வொருவரும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று தவறாமல் தங்கள் வாக்கை செலுத்திட வேண்டும். தங்களுடைய உறவினர் கள், நண்பர்கள் யாரேனும் வெளியூரில் இருந்தால் அவர்களுக்கு தகவல் தெரிவித்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வாக்கை செலுத்த வருகைபுரிய செய்து வாக் கினை செலுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றார்.

Tags

Next Story