மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மகளிர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள் ஊட்டச்சத்து, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு புஷ்கரம் வேளாண் கல்லூரியில் இருந்து கிராம வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்திற்கு வந்துள்ள மாணவிகள் , பள்ளி மாணவர்களுக்கு , பெண்கள் ஊட்டச்சத்து மற்றும் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு R.கண்ணன், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஆ.ரெக்ஸிலின் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், மாதவிடாய் காலத்தில் வரும் இன்னல்களை எதிர்கொள்ள , சத்தான உணவுமுறை மற்றும் யோகா பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டது. பெண்களுக்கு ஊட்டசத்தின் முக்கியத்துவத்தையும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றின விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இதில் மாணவிகள் குழுவினர் செயல்விளக்கம் மூலம் இப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்த ஆரோக்கியமான வழிமுறைகளை செயல்விளக்கம் மூலம் மாணவிகளுக்கு விளக்கினர்.

Tags

Next Story