குறைவான ஓட்டுப்பதிவு நடந்த பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
விழிப்புணர்வு பேரணி
குமாரபாளையம் நகராட்சியில் குறைவான ஓட்டுப்பதிவு நடந்த பகுதிகள் வழியாக 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் குறைவான ஓட்டுப்பதிவு நடந்த பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் முருகன், ரெட் கிராஸ் செயலர் ராஜேஷ்கண்ணன், தாசில்தார் சண்முகவேல் உள்பட பலர் பங்கேற்று, வீடு வீடாக சென்று, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டி, துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.
இதன் விழிப்புணர்வு பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கியது. குறைவான ஓட்டுப்பதிவு நடத்த பகுதிகளில் நடந்த இந்த பேரணி, மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. வழி நெடுக 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தவாறு சென்றனர். வருவாய்த்துறையினர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story