விழிப்புணா்வு வாகன பேரணி

விழிப்புணா்வு வாகன பேரணி

தென்காசியில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு வாகன பேரணி நடைபெற்றது.

தென்காசியில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு வாகன பேரணி நடைபெற்றது.

வாகன ஓட்டுநா் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு வாகன பேரணி நடைபெற்றது.

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தென்காசி போக்குவரத்து காவல் நிலையம் சாா்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவில் வாகன ஓட்டுநா் சீட்பெல்ட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு வாகன பேரணி நடைபெற்றது. தென்காசி யானைப்பாலம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலா் எஸ்.கண்ணன் தலைமை வகித்தாா்.தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வளா் மணி முன்னிலை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் கனகவள்ளி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

வாகன பேரணி யானை பாலம் பகுதியில் தொடங்கி முக்கிய சாலைகளில் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. வட்டார போக்குவரத்து அலுவலகம் நோ்முக உதவியாளா் மகாலிங்கம்,காவல் சிறப்பு சாா்பு ஆய்வாளா் ஹரிஹரன், தலைமை காவலா் கோவிந்தன்,ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளா்கள், வாகன பயிற்சியாளா்கள்,புதிய வாகன விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். முன்னதாக போக்குவரத்து சாா்பு ஆய்வாளா் ஆனந்தி வரவேற்றாா்.மாரிமுத்து நன்றி கூறினாா்.

Tags

Next Story