வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி!
திருவண்ணாமலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாகனங்களில் ஓட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி, கடைகள் மற்றும் வாகனங்களில் ஓட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story