ராசிபுரத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ராசிபுரத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் சார்பில், மற்றும் ராசிபுரம் அரசு மருத்துவமனை இணைந்து டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணியை ராசிபுரம் காவல்துறை துணைக் கண்கணிப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் உதவி ஆளுநர் ராஜூ முன்னிலை வகித்தார். பேரணியில், தனியார் கல்லூரியான முத்தாயம்மாள் கல்லூரி, ஹனிமன் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, ராசிபுரம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் தலைவர் விஜய், செயலாளர் சக்திவேல், பொருளாளர் ஜெகதீஸ்வரன், உறுப்பினர்கள், நிர்வாகிகள் என 250.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியானது, ராசிபுரம் சின்னகடை வீதி, பெரியகடைவீதி, ஆத்தூர் சாலை வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் அரசு மருத்துவமனையில் வந்து நிறைவடைந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மேலும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags

Next Story