போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

பட்டுக்கோட்டையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பட்டுக்கோட்டையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், தமிழக அரசு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை தஞ்சை மாவட்டம் சார்பில், பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மது அருந்துதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், போதை பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துதல். ஆகியவற்றிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கியது. போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு பேரணியை, கலால் துறை தஞ்சை உதவி ஆணையர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோட்ட அலுவலர் சுமதி, பட்டுக்கோட்டை (பொறுப்பு) வட்டாட்சியர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி மணிக்கூண்டு, மார்க்கெட், தபால் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக வந்து நீதிமன்றம் அருகில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் மனோரா ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பட விளக்கம் கலால் காவல்துறை சார்பில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் தஞ்சை உதவி ஆணையர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். கோட்ட அலுவலர் சுமதி, பொறுப்பு வட்டாட்சியர் பாஸ்கரன் மற்றும் பலர் உள்ளனர்.

Tags

Next Story