பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக முன் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் குமரி வட்டாரங்களுக்கு உட்பட்ட 94 ஊராட்சிகளை சேர்ந்த சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. பேரணியானது 'உரக்க சொல்வோம், பொறுக்க மாட்டோம்' என்ற கோஷத்துடன் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட இணை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் பீபி ஜான், மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினி, உதவி திட்ட அதிகாரி வளர்மதி, மேலாளர் கனகராஜ் உட்பட ஒருங்கிணைந்த சேவை மையப் பணியாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் திட்ட அலுவலக பணியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story