நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளிசார்பாக புகையிலை மற்றும் குட்கா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளிசார்பாக புகையிலை மற்றும் குட்கா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளிசார்பாக புகையிலை மற்றும் குட்கா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி சார்பாக இன்று 12.08.2024 திங்கள் கிழமை காலை 10.00 மணியளவில் பரமத்தியில் “புகையிலை மற்றும் குட்கா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி” நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியை பரமத்தி காவல் சரகத்தை சார்ந்த காவல் ஆய்வளர் கணேஸ் குமார். அவர்கள் தலைமையேற்று கொடியசைத்து துவங்கி வைத்தார்கள், காவல் உதவி ஆய்வாளர் சரண்யா அவர்கள் உடன் இருந்தனர்.

இவ்விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளியின் பொருளாளர் கா.தேனருவி அவர்கள் முன்னிலை வகித்தார். கீழ் பரமத்தியில் இருந்து பேரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சென்றது. 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியாக மாணவ, மாணவியர்கள் செல்லும் போது “புகையிலை மற்றும் குட்கா ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்கள் எழுப்பியும் சென்றனர்”. சுமார் 2.00மணி

நேரம் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியின் இறுதியில் போதைப்பழக்கத்திற்கு ஒருபோதும் அடிமையாக மாட்டேன், அதன் தீமைகளை நன்கு அறிவேன், என்னுடைய நண்பர் உறவினர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக்க விடமாட்டேன். அவர்களுக்கு உரிய அறிவுரை கூறியும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும் பாதுகாப்பேன் என்னும் உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். இறுதியில் பேரணியை ஏற்பாடு செய்து தந்த பள்ளி நிர்வாகத்தினரையும், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பும், ஒத்துழைப்பும் வழங்கிய பரமத்தி காவல் ஆய்வாளர் அவர்களுக்கும், உதவி காவல் ஆய்வாளர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து காவலர்களுக்கும். குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வந்த ஆசிரியர்கள், ஒட்டுநர்கள் அனைவருக்கும் பள்ளி முதல்வர் ஆண்டனி ராஜா அவர்கள் நன்றி கூறினார். இறுதியாக குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டு பேரணி மிகவும் சிறப்பாக நிறைவுப் பெற்றது.

Tags

Next Story