தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக விழிப்புணர்வு பேரணி

தருமபுரியில் அரசு கலைக்கல்லூரிமாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் காவல்துறையுடன் இணைந்து சைபர் க்ரைம் விழிப்புணர்வு பேரணி இன்று நடத்தப்பட்டது

தருமபுரி மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையம் சார்பில் இன்று 20.02.2024 தருமபுரி அரசு கலைக்கல்லூரி NCC மற்றும் NSS மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் காவல்துறையுடன் இணைந்து சைபர் க்ரைம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சுமார் 250 மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிபாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணிக்கு கூடுதல் காவல் கண்காணிபாளர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமை வகித்தார்.

பேரணியில் கலத்து கொண்ட மாணவ மாணவிகள் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் காவலர் இசைக்குழு வாத்தியங்களுடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி மாவட்ட காவல் அலுவலகத்தில் தொடங்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை நடைபெற்றது. பேரணியின் போது பொது மக்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். மேலும் சைபர் கிரைம் புகார்களை தெரிவிக்க 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணையும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story