100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

காங்கேயம் பேருந்து நிலையம் அருகே 100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதன்படி நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கேயம் பகுதியில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் 100 சதவிகித வாக்குபதிவை வழியுறுத்தி தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.‌

மாலை சுமார் 5 மணி அளவில் காங்கேயம் வட்டாச்சியர் மயில்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வரும் தேர்தலில் முழு வாக்குபதிவு அவசியம் என்பதை வலியுறுத்தி காங்கேயம் பேருந்து நிலையம் முதல் காங்கேயம் தாலுக்கா அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்‌. சுமார் 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அனைவரும் தவறாமல் தங்களின் வாக்குகளை செலுத்த வேண்டும், 100 சதவிகித வாக்குபதிவு தான் முழுமையான அரசு அமைந்திட வழிவகுக்கும், புதிய வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்கு அளிப்பது நமது கடமை என்றும் கோசமிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். புதிய வாக்காளர்களான கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த பேரணியில் காங்கேயம் வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன், தேர்தல் அதிகாரிகள், வட்டாச்சியர் அலுவலக பணியாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story