100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி 

சேதுபாவாசத்திரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் சார்பில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேராவூரணி சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷணகுமார், வட்டாட்சியர் தெய்வானை ஆகியோர் முன்னிலை வகித்தனர் . வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு அங்கன்வாடிப் பணியாளர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று, ஆவணம் சாலையில் அனைவரும் 100 விழுக்காடு வாக்களிக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பேரணியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அனுசுயா, மேற்பார்வையாளர்கள் செல்வநிதி, காமாட்சி, கந்தவேல் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர் .

Tags

Next Story