மாற்றுத்திறனாளிகள்  விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் துவக்கி வைப்பு

மாற்றுத்திறனாளிகள்  விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் துவக்கி வைப்பு
X
பேரணியை துவக்கி வைத்த கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுதிறனோருக்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பேரணியினை மாவட்ட ஆட்சி தலைவர் பி.என்.ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பதாகைகளையும் மற்றும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களையும் வெளியிட்டதோடு, விழிப்புணர்வு வாகன கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பிரகலாதன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பிபி ஜாண், துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story