அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி....

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி....

விழிப்புணர்வு 

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கற்பகம், தொடங்கி வைத்தார்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கற்பகம், ஏப்ரல் ஆறாம் தேதி காலை 8:30 மணியளவில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அஞ்சல் துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தபால்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர முதல் முறை ஜனநாயக் கடமையாற்றவுள்ள இளம் வாக்காளர் ஒருவருக்கு விழிப்புணரவு வாசகம் அடங்கிய அஞ்சல் அட்டையை வழங்கினார்.

சுமார் 200க்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற இப்பேரணி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தொடங்கி காந்தி சிலை, சங்குப்பேட்டை வழியாக பாலக்கரையில் வந்து முடிவடைந்தது. இந்த பேரணியில் பங்கேற்ற ஊழியர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த கோஷங்களை எழுப்பியவாறும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வழங்கியவாறு பேரணியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஶ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பழனிச்சாமி, பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், தேர்தல் விழிப்புணர்வு பணிக்கான ஒருங்கிணைப்பாளர் கோபால் மற்றும் அஞ்சல் துறை ஆய்வாளர்கள் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story