தஞ்சையில் நூறு விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி 

தஞ்சையில் நூறு விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி 

விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்த ஆட்சியர்

தஞ்சையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் நேர்மையாக 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேர்மையாக 100 விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் சரபோஜி கல்லூரி வளாகத்தில் “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர்கள் அவசியம்,

வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு வில்லையினை பொதுமக்களுக்கு வழங்கியும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது கைபேசியில் ஒட்டியும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, உதவி ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணுபிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேராவூரணி இதேபோல்,

பேராவூரணியில் நீலகண்டப் பிள்ளையார் ஆலயத்தில் தொடங்கி, வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷணகுமார், வட்டாட்சியர் தெய்வானை, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ராணி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story