மண்ணச்சநல்லூர் அருகே விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள்
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு கட்ட விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் சார்பாக இருங்களூரில் இன்று 11 மணியளவில் தேர்தல் உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் வட்டார இயக்க மேலாளர் செல்லபாப்பா, வட்டார ஒருங்கினைப்பாளர் ரமணி இருங்களூர் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர் என 100 க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.