அறிவியல் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவியர் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை அதிமுக மாவட்ட பெருந்தலைவரும், விராலிமலை ஒன்றிய செயலாளருமான பழனியாண்டி கொடியை சிட்டி துவக்கி வைத்தார். விராலிமலை சட்டமன்ற கட்டிடத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணி செக்போஸ்ட் மலைக்கோட்டை வீதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று கல்லூரியை அடைந்தது.
இந்தப் பேரணியில் அறிவியல் அறிஞர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானிகளின் உருவ படங்களை முகத்தில்(முகமூடி) மாட்டிக் கொண்டு மாணவ மாணவியர்கள் அவர்களது புகழை சொல்லி கோஷமிட்டனர். பின்னர் மாணவ மாணவியருக்கு விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு சாதனங்களும் தற்பொழுது மனிதன் மட்டுமல்லாது பறவைகள் விலங்குகளுக்கு எவ்வாறு பயன்படுகிறது.
அதேபோல் பறவைகளை கொண்டு மனிதன் விமானத்தை கண்டுபிடித்தான் இதுபோல் ஒவ்வொரு பறவை மற்றும் விலங்கினை கொண்டு மனிதர்களுக்கு தற்போது பயன்படுத்தப்பட்ட வரும் பேருந்து ரயில் விமானம் கப்பல் ஆகியவற்றை கண்டுபிடித்தார்கள் ஆகவே மனிதன் வாழ்வில் நாம் மனிதனுக்கு பயன்படக்கூடிய ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் அதேபோல் பல்வேறு இன பறவைகள் விலங்குகளுக்கும் பயன்படும் வகையில் நாம் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டும் என பேராசிரியர்கள் மாணவ மாணவியருக்கு எடுத்துக் கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர் மட்டுமல்லாது கல்லூரி விரிவுரையாளர்களும் அதே போல் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
