திருப்பூரில் 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி

திருப்பூரில் 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி

பேரணியில் கலந்து மகளிர் அணியினர்

திருப்பூரில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூரில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் 2024 வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் துவங்கியது. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் ,

வாக்களிப்பது நம் கடமை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு துவங்கிய இந்த பேரணியை மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் தொடங்கி வைத்தார்.

மாவட்ட சப் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்த இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story