சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி 

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி 
சாலை விழிப்புணர்வு பேரணியை துவக்கிய கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டம், இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்ற சாலை விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்ற தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பேரணியை துவக்கி வைத்து கலெக்டர் பேசுகையில், சாலை விதிகளை பின்பற்றாமல் அதிவேகமாக செல்போன் பேசிக்கொண்டு போதையில் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

சிலர் சமூக வலைத்தளத்தில் வீடியோ போஸ்ட் செய்வதற்காக வாகனங்களில் சாகசம் செய்கின்றனர் இதுவும் உயிர் பலிக்கு காரணமாக அமைந்துள்ளது என்றார். இப்பேரணியில் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்து கல்லூரி, ஐயப்பா மகளிர் கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து சுமார் 320க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், பேராசிரியார்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story