வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி

X
விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர் அருகே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மகளிர் சுய உதவிக்குழுவினரின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு மாதவி எசனை எளம்பலூர் பகுதியில் பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு பணிக்கான ஒருங்கிணைப்பாளர் கோபால் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
