வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி

வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி
 சிவகாசியில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சிவகாசியில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

விருதுநகர் மாவட்டம்,சிவகாசியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர்கள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான முனைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் பொதுமக்கள் இடையே தேர்தல் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வரும் வகையில் சிவகாசி காமராஜர் சிலை அருகே வாக்காளர்கள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கையெழுத்து போட்டு,மேலும்100 சதவீதம் வாக்களிப்பது குறித்து கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் முன்னதாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தேர்தலை நியாயமான முறையில் சந்திக்கும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் பொது மக்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியரும்,தேர்தல் அலுவலருமான ஜெயசீலன் வழங்கினார்.விழிப்புணர்வு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சிவகாசி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாசியர் விஸ்வநான்,தாசில்தார் வடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story