திருவாரூரில் மனித நேய வார விழாவை ஒட்டி விழிப்புணர்வு பேரணி
திருவாரூரில் மனித நேய வார விழாவை ஒட்டி விழிப்புணர்வு பேரணி
திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழாவினை ஒட்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழாவினை ஒட்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி திருவாரூர் ஆருரான் திருமண மண்டபம் அருகே முடிவு பெற்றது. இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர் .இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ,வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story