திருப்பூரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை மற்றும் காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வடக்கு, தெற்கு வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி . ஜனவரி மாதம் 11ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெறுகிறது, இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து துறை மற்றும் மாநகர காவல் துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியாசைத்து துவக்கி வைத்தனர்

அதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய சாலைகளின் வழியாக சென்று கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது போக்குவரத்து காவல்துறை மற்றும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் அவிநாசி சாலை புஷ்பா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் விழிப்புணர்வு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ,மாணவிகள் தலைக்கவசம் அணிவது குறித்தும் செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவது குறித்தும் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது என்றும் சாலை விதிகளை மதிப்போம் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினர்

இந்த நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள். நிர்மலா தேவி, பாஸ்கர், செந்தில் ராம், ஈஸ்வரன் உள்ளிட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும் மாநகர போக்குவரத்து காவல்துறையின் உதவி ஆணையர். சுப்புராமன் தெற்கு காவல் துறை ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபின் அபு பேசுகையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் செல்லும் பொழுது இருவரும் தலைக்கவசத்தை அணிய வேண்டும் என்றும் தலைக்கவசம் அணிவதன் மூலம் விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story