உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அதன் ஈரோட்டில் இந்திய மருத்துவர் சங்கம், கேன்சர் மையம் மற்றும் தனியார் அமைப்பினர் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். காலிங்கராயன் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து தொடங்கிய பேரணியை காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தொடங்கி வைத்தார். பெருந்துறை சாலை, ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்ற பேரணி சம்பத்நகரில் முடிவடைந்தது. புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், புற்று நோயின் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கான அவசியம் குறித்த பதாதைகளுடன் பேரணியாக சென்றவர்கள், இளம் சிவப்பு வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் கடந்த ஆண்டு புள்ளி விபரப்படி, இந்தியாவில் 23 மில்லியன் மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்திய அளவில் தமிழ்நாடு புற்று நோய் பாதிப்பில் 5.வது இடத்தில் இருப்பாதகவும் கூறுனார். தவறான உணவு பழக்கம், புகையிலை பொருட்கள் பயன்பாடு, சுற்றுச்சூழல் போன்ற காரணிகளே புற்று நோய் பாதிப்பிற்கு காரணம் என கூறிய அவர், ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு அளவில் முதலிடம் வகிப்பதாக தெரிவித்தார்.
Next Story