ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரோட்டரி சங்கம், காவல்துறை, மேட்டார் வாகனப் போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ராசிபுரத்தில் நடைபெற்றது. தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த ஜன.5 முதல் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, முகாம்கள்,கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.
பிப்,.14 வரை நடைபெறும் விழிப்புணர்வு முகாம்களை மோட்டார் வாகன போக்குவரத்துத்துறை பல்வேறு பகுதிகளில் நடத்திவருகிறது. ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் து.நித்யா பங்கேற்று கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, ஒட்டுநர் உரிமம் பெறுவது, தலை கவசம் அணிதல்,
சாலை விதிமுறைகள் பின்பற்றுதல்,, சீட் பெல்ட் அணிதல், செல்போன் பேசியபடி வாகனம் ஒட்டுதை தவிர்த்தல் போன்றவற்றின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார். பின்னர் ரோட்டரி சங்கத் தலைவர் பி.சீனிவாசன் தலைமையில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை ராசிபுரம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ஜெ.ஜெயசங்கரன்,
மோட்டார் வாகன ஆய்வாளர் து.நித்யா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்பேரணி பழைய பஸ் நிலையம், கடைவீதி, ஆத்தூர் சாலை, புதிய பஸ் நிலையம் வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை அடைந்தது. சாலை பாதுகாப்பு முறைகள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தட்டிகள் ஏந்தியவாறும், துண்டு பிரசுரங்கள் வெளியிட்டும் சென்றனர்.
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள்,கல்லூரிமாணவ மாணவிகள் என 200.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.