குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி
உதகையில் குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
குழந்தைகள் தினமான இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் குழந்தைகளின் பாதுகாப்பை நாம் எவ்வாறு உறுதி செய்ய வேண்டும், குறிப்பாக குழந்தை திருமணம், இடைநில்லாக்கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தி மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்ப்பட பலர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் அருணா துவக்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் தலைமையில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதிமொழி கேட்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகளில் சென்று நிறைவடைந்தது.
Tags
Next Story