சமரச மைய தீர்வு மையத்தின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு
பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் சமரச மைய தீர்வு மையத்தின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு பாபநாசம் நீதிபதி பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் துணை சமரசமயத்தின் சேவைகள் பற்றி பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி பாபநாசம் பேருந்து நிலையத்தில் வணிக நிறுவனங்கள் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் பொதுமக்களுக்கு சமரசம் மையம் பற்றிய துண்டு பிரசுரங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது பாபநாசம் நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன நீங்கள் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகும் போது உங்கள் வழக்கை சமரசமயத்திற்கு அனுப்பலாம் சமரச மையத்தில் நீங்களே எதிர் தரப்புடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம் இதில் உங்கள் வழக்கறிஞரும் பங்கு கொண்டு உங்களுக்கு உதவலாம் பயிற்சி பெற்ற சமரசர்கள் உங்களது சமரச பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக வழிகாட்டுவார்கள் சமரசமையத்தில் நடைபெறும்.
அனைத்து பேச்சுவார்த்தைகளும் ரகசியம் காக்கப்படும் அது உங்கள் வழக்கை எந்த வகையிலும் பாதிக்காது சமரசத்தில் உங்கள் பிரச்சினையை நீங்களே கையாண்டு உங்களுக்கு உகந்த உங்களால் ஒப்புக்கொள்ளப்படு கின்ற தீர்வுகளை எட்டலாம் சமரசத்தில் வழக்குகளில் எவ்வித மேல்முறையீடு இல்லாமலும் விரைவாகவும் இறுதியான சுமூக தீர்வு கட்டணம் ஏதுமின்றி காண முடியும் சமரசத்தின் மூலம் உங்கள் வழக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டால் நீதிமன்ற கட்டணத்தை உங்களிடமே திரும்ப ஒப்படைக்க நீதிமன்ற உத்தரவிடும் சமரசம் ஏற்படவில்லை என்றால் நீங்கள் உங்கள் வாதத்தை நீதிமன்றத்தின் முன் தொடரலாம் இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமை எழுத்தர் விஜயா சமரச மையத்தில் மத்தியதர்கள் ஜெயக்குமார் இளையராஜா வட்ட குழு உதவியாளர் ராஜேஷ் குமார் தன்னார்வலர் குணசீலன் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்