வையப்பமலை கவிதா’ஸ் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

வையப்பமலை கவிதா’ஸ் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

வையப்பமலை கவிதா’ஸ் கல்லூரியில்பெண்களுக்கான தூய்மைப்பணி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

வையப்பமலை கவிதா’ஸ் கல்லூரியில்பெண்களுக்கான தூய்மைப்பணி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
வையப்பமலை கவிதா’ஸ் கல்லூரியில் பெண்களுக்கான தூய்மைப்பணி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நாமக்கல் மாவட்டம், வையப்பமலை கவிதா’ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பாக பெண்களுக்கான தூய்மைப்பணி மற்றும் தன்தூய்மை பேணுதல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர்.விஜயகுமார், தலைவர் பழனியப்பன், துணைத்தலைவர் சரஸ்வதி மற்றும் கல்லூரியின் செயலாளர் கவிதா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வையப்பமலை அரசு மருத்துவமனை மருத்துவர் ஆஷாதேவி கலந்து கொண்டார். வேதியியல் துறை தலைவி திலகமணி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் விஜயகுமார் பேசுகையில் .... “மாணவிகள் சமுதாயத்தில் தங்களின் பொறுப்பை உணர்ந்து வீட்டிற்கும் நாட்டிற்கும் சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும்” என பேசினார். தாளாளர்P.செந்தில்குமார் பேசுகையில் .. “பெண்களின் முன்னேற்றம் இன்றைய நிலையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்கள் தூய்மையை பற்றிய விழிப்புணர்வை தனது குடும்பத்திற்கு ஏற்படுத்த வேண்டும்”” என்று பேசினார். கல்லூரி செயலாளர் கவிதா செந்தில்குமார் அவர்கள் பெண்களின் உடல்நலத்தில் தூய்மையின் பங்கு குறித்து மாணவிகளிடம் கலந்துரையாடினார். சிறப்பு விருந்தினர் மருத்துவர் ஆஷாதேவி பேசுகையில் பெண்கள் தாங்கள் சுயமாக தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் மன உறுதி உள்ளவர்களாக வாழ வேண்டும். தம் குடும்பத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தமது பெற்றோரோடு சேர்ந்து பாடுபட வேண்டும். கல்லூரியில் சுய ஒழுக்கம், சுய தூய்மை போன்றவற்றை பின்பற்றுவதோடு தம்முடன் பயிலும் மாணாக்கர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று பேசினார். ஆங்கில துறை பேராசிரியை மகாலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வணிகவியல் துறை பேராசிரியை காவியா நன்றி கூறினார்.

Tags

Next Story