தனியார் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
கருத்தரங்கம்
தனியார் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் மேகலை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கடலுார் மண்டல பூச்சியியல் வல்லுநர் மீனா, கள்ளக்குறிச்சி மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்ரமணியன் பங்கேற்று, டெங்கு காய்ச்சல் குறித்தும், பரவும் விதம், கொசுக்களை உற்பத்தியாகாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் முறை குறித்து விளக்கி கூறினர். இதில், சுகாதார ஆய்வாளர்கள் ரவி, கவுதம், விக்னேஷ்வரன், அரவிந்தன், இளநிலை பூச்சியியல் வல்லுநர்கள் சிட்டிபாபு, சரவணன், பேராசிரியர்கள் பவுலின்சங்கீதா, ராணி, சணமுகசுந்தரி, ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் லோகு நன்றி கூறினார்.
Next Story