வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் புதிய வாக்காளர்கள், வாக்களிப்பதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாநில வரி, ஈரோடு கோட்டம் இணை ஆணையர் லஷ்மி பலியா தண்ணீரு முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், முதல் வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் மற்றும் முதல் வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து, எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலும், விரைவாக சென்றடைய கூடிய வகையிலும், புதுமையான வகையிலும், விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.