குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

தேனி பழைய பேருந்து நிலையத்தில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.

தேனி பழைய பேருந்து நிலையத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை முதன்மை மாவட்ட நீதிபதி கே.அறிவொளி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா இன்று (12.06.2024) கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்கள். குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் ஜுன் 12 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும், குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு பணிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பிரச்சாரத்தினை முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்கள்.

பின்னர், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியினை முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags

Next Story