பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு ஆய்வு கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு ஆய்வு கூட்டம்

சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை சார்பாக பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் நடந்தது.


சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை சார்பாக பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் நடந்தது.
சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை சார்பாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம்.... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை சேர்ந்த அதிகாரிகள் கந்தசாமி,அபிசல் அகமது,சமீரன் குமார்,மற்றும் பட்டாசு ஆராய்சி மைய அதிகாரி ஜனா ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் வைத்து பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள் என 300க்கு மேற்பட்டோர் கலந்த கொண்ட விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.பின்னர் சிவகாசி வெடி பொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி கந்தசாமி பேசியதாவது பட்டாசு ஆலைகளில் விதிமீறல் மற்றும் கவனச் சிதறல்கள் ஏற்படுகிறது எனக் கூறலாம் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு விபத்து நடைபெறுகிறது குறைய வேண்டும் அல்லது விபத்து இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்க வேண்டும்,இந்த ஆண்டு 11 பட்டாசு ஆலை விபத்துகளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் கண்காணிப்பாளர்களுக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது,இவர்கள் தங்களது அனுபவத்தில் மூலம் செயல்பட்டு வருகிறார்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டால் விபத்தினை தவிர்க்கலாம் என்றார் இக்கூட்டத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story