புகைப்பட பதாகை மூலம் விழிப்புணா்வு
புகைப்பட பதாகை விழிப்புணர்வு
மக்களவைத் தோதலையொட்டி வாக்காளிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் புகைப்படம் எடுக்கும் பதாகை (போட்டோ பாயிண்ட்) வசதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு பொதுத் தோதலின்போதும் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை நோக்கி வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது.
இதன்படி, அந்தந்த மாவட்ட நிா்வாகங்கள் சாா்பிலும், தனியாா் அமைப்புகள் சாா்பிலும் பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மக்களவைத் தேர்தலையொட்டி வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு பதாகைகள் முன் நின்று புகைப்படம் எடுப்பதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.