போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

விழிப்புணர்வு வழங்கிய போது

தர்மபுரி நான்கு வருட பகுதிகள் போக்குவரத்து காவல்துறை சார்பில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு தரப்பட்டது.

18 வயது ஆகாமல் வாகனம் இயக்குபவர்களுக்கும் வாகனம் கொடுப்பவர்களுக்கும் அபராதம் மைனரின் பெற்றோர்களுக்கும் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனை அடுத்து நேற்று தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் தர்மபுரி நகர போக்குவரத்து காவல் துறையின் சார்பில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பிரசுரங்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அளிக்கப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டது.

அப்போது 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டினால் அந்த வாகனத்தின் ஆர்சி ரத்து செய்யப்படும்.18 வயதுக்குட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாளர்களுக்கும் மற்றும் மைனரின் பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.18 வயது ஆகாத மைனர் வாகனத்தை ஓட்டினால் அவருக்கு 25 வயது வரை வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது.

18 வயதுக்கு உட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாளர்களுக்கு மற்றும் மைனரின் பெற்றோர்களுக்கு மூன்று வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட போக்குவரத்து காவல்துறை சதீஷ்குமார், ரகுநாதன், விநாயகமூர்த்தி, கார்த்திக் மற்றும் வழக்கறிஞர் சுபாஷ் சமூக விழிப்புணர்வாளர், உள்ளூர் தொலைக்காட்சி சிஎஸ்கே டிவி செல்வம், ஜிபிஎம் டிவி கிரி, மற்றும் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story