உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

குமாரபாளையத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம்  நடந்தது.

குமாரபாளையத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம்  நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவகங்கள், பேக்கரிகள், பள்ளிகள், கல்லூரி உணவு விடுதிகள், தொழிற்கூடங்களில் உள்ள உணவு விடுதிகள் ஆகியவற்றில் பணியாற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சார்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இதில் உணவு தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், உணவு தயாரித்த பின் பாதுகாப்பாக எவ்வாறு பராமரிப்பது, எவை, எவை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளை சேர்ந்த உணவு வணிகர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பரிஷன் நிறுவனம் சார்பில் நாகலட்சுமி பயிற்சி வழங்கினார். முகாம் முடிவில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் உறுதிமொழி வாசிக்க, அனைவரும் உணவு பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் கைகளை கழுவி, இடத்தை சுத்தமாக வைத்து, நல்ல பொருட்களை கவனமாக சமைத்து, சுகாதாரமான முறையில், எனது நிலையத்தில் உணவுத்தரம் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்ற நிலையமாக என்றென்றும் இருக்க செய்வேன் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story