அயோத்தி ராமர் கோவில் மகா பிரதிஷ்டை விழா - பாஜகவினர் அன்னதானம்

அயோத்தி ராமர் கோவில் மகா பிரதிஷ்டை விழா -  பாஜகவினர்  அன்னதானம்

அன்னதானம் 

அயோத்தி ஶ்ரீராமர் திருக்கோவில் மகா பிரதிஷ்டை விழாவையொட்டி, மேலூர் அருகே ஶ்ரீ ராமர் திருவுருவ படம் வைத்து பாஜகவினர் வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூரில் பாஜக சார்பில், அயோத்தியில் ஶ்ரீராமர் திருக்கோவில் மகா பிரதிஷ்டை, மற்றும் திறப்பு விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாஜக இராணுவ பிரிவு மாநில செயலாளர் ஆனந்தஜெயம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னதாக ஶ்ரீராமர் திருவுருவ படம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, அயோத்தியில் ஶ்ரீராமர் திருக்கோவில் மகா பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழா நிகழ்வுகள் பொதுமக்களுக்கு காட்சிபடுத்தும் விதமாக நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புடன் கூடிய அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பாஜகவினர், இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக் கொண்டனர். இந்நிலையில், பொது இடத்தில் இந்நிகழ்ச்சிக்கு நடைபெற்ற நிலையில், உரிய முறையில் அனுமதி பெறதாதால் காவல்துறையினர் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, வழக்குப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story