அயோத்தி ராமர் ஆண்டு நல்வாழ்த்துகள் என்ற போஸ்டரால் பரபரப்பு

அயோத்தி ராமர் ஆண்டு நல்வாழ்த்துகள் என்ற போஸ்டரால் பரபரப்பு

 'அயோத்தி ராமர் ஆண்டு நல்வாழ்த்துகள்' என மதுரையில் பாஜ.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.  

'அயோத்தி ராமர் ஆண்டு நல்வாழ்த்துகள்' என மதுரையில் பாஜ.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அந்நகரமே கோலாகலமாக தயாராகி வருகிறது. அயோத்தியில் பல்லாயிரம் கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தையும், புதிதாக கட்டப்பட்ட மகரிஷி சர்வதேச விமான நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ராமருக்கு மிகப் பெரிய கோயில் கட்டப்பட்டுள்ளதால், அங்கு மிக அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள். இதை கருத்தில் கொண்டே பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்மூலம், அயோத்தி ஸ்மார்ட் நகரமாக உருமாறும் எனக் கூறப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் பற்றி பிரதமர் மோடி பேசுகையில், "நாட்டின் 140 கோடி மக்களும் ஜனவரி 22ஆம் தேதி தங்கள் வீடுகளில் ராம ஜோதியை ஏற்ற வேண்டும். அன்றைய தினத்தை தீபாவளி போல கொண்டாட வேண்டும். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் நாட்டு மக்கள்எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதே நாளில் எல்லோரும் இங்கே கூடுவது சாத்தியமற்றது. எனவே, ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடந்து முடிந்த பிறகு தங்களுக்கு ஏற்ற ஒரு நாளில் அயோத்திக்கு வருகை தரவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், இன்று நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாஜக மதுரை மாநகர் மாவட்டப் பொதுச் செயலாளர் குமார் என்பவர் சார்பில் மதுரையில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், "தேசத்தின் அடையாளம் அயோத்தி ராமர் கோயில், கி.பி 2024 அயோத்தி ராமர் ஆண்டு நல்வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 2024 அடிக்கப்பட்டு, அயோத்தி ராமர் ஆண்டு நல்வாழ்த்துகள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags

Next Story