வேலூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள்.

வேலூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள்.

 வாழை மர கன்று விற்பனை 

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.a

நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் அனைத்து வகையான கருவிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயுதபூஜை அன்று கருவிகளை வழிபட்டால் வெற்றி கிடைக்கும் என்பது மக்கள் நம்பிக்கை. மேலும் ஆயுதபூஜை என்பது பாவங்களை வென்றெடுக்கும் விழாவாகும். கொண்டாடப்பட்டு வருகிறது . விழாவை முன்னிட்டு வேலூர் கோட்டை சுற்றுச்சாலை பகுதியில், ஆயுத பூஜைக்கு தேவையான, வாழைக்கன்று, பூக்கள், வெள்ளை பூசணிக்காய், பொறி உள்ளிட்ட பல்வேறு வகையான பூஜை பொருட்கள்.பல்வேறு இடங்களிலிருந்து எடுத்து வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அதனை ஏராளமான பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். வேலூர் மாவட்டத்தில் இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் மக்கள் வழிபாடு செய்தனர். மேலும்,நான்கு சக்கர வாகனங்கள் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தொழில்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு பூஜை செய்யப்பட்டு வழிபாடு செய்தனர்.

Tags

Next Story