கருங்கலில் ஆயுத பூஜை விழா - அமைச்சர் பங்கேற்பு.

கருங்கலில் ஆயுத பூஜை விழா - அமைச்சர் பங்கேற்பு.

 அமைச்சர் மனோ தங்கராஜ் 

கருங்கல் வேன் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நல சங்கம் சார்பில் நடந்த ஆயுத பூஜை விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார்.
கருங்கல் வேன் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நல சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. முதல்நாள் பூஜையும் வாகனங்களின் அலங்கார அணி வகுப்பும் நடைபெற்றது. 2-ம் நாள் விழா பொதுக்கூட்டமும், திரைப்பட இன்னிசை கச்சேரியும் நடந்தது. பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தலைவர் பால் ஜில்சிங் தலைமை தாங்கினார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கருங்கல் காவல் உதவி ஆய்வாளர் மகேஷ், சங்க சட்ட ஆலோசகர் பிபின் ஞானகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் பால்ராஜ், சமூக சேவகர் கருங்கல் ஜார்ஜ், பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், கிள்ளியூர் (தெ) ஒன்றிய திமுக செயலாளர் கோபால், தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் கருங்கல் அலக்சாண்டர் உட்பட பலர் பேசினர்.

Tags

Next Story