சேத்துப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் ஆயுத பூஜை விழா

சேத்துப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் ஆயுத பூஜை விழா

ஆயுத பூஜை விழா


சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் ஆயுத பூஜை விழா நேற்று முன்தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு சங்கத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.செயலாளர் சலீம் பாஷா பொருளாளர் நாகராஜன் துணைச் செயலாளர்முபாரக் துணைத் தலைவர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் கௌரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சேத்துப்பட்டு திமுக நகர செயலாளர் இரா. முருகன்,காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் முனிரத்தினம் ஆகியோர் ஆயுத பூஜை நடத்தி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை பரிசு பொருட்களை வழங்கினர். விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்சரவணன், கதிரவன், முருகன், மங்களம் ரமேஷ், கனகா ராஜேஷ்குமார்,பத்மா சுக்குகுமார்,ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க உறுப்பினர்கள், உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story