கன்னியாகுமரியில் அலைமோதிய ஐயப்ப பக்தர்கள்.

X
கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்தனர்.
குறிப்பாக சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் களைகட்டி உள்ளது.
Tags
Next Story
