கோவில்களில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்.

கோவில்களில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்.

ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதி மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்.இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டது.இந்த நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கி உள்ளனர்.குறிப்பாக கோவையில் சுமார் 51 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரளான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கி உள்ளனர்.

Tags

Next Story