தொடர் மழை எதிரொலி - கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் வருகை குறைவு

தொடர் மழை எதிரொலி - கன்னியாகுமரியில்  ஐயப்ப பக்தர்கள் வருகை  குறைவு
பைல் படம்
தமிழகத்தில் தொடர் மழை எதிரொலியாக கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்களின் வருகை குறைந்துவிட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் இந்த வருடம் மண்டலகால பூஜை கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்கள் பலரும் கன்னியாகுமரிக்கும் வந்து செல்கின்றனர். இங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கின்றனர். ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில், குமரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பல நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துவிட்டது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே சிறிது கூட்டத்தை பார்க்க முடிகிறது. ஆனாலும் வழக்கமான மக்கள் கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags

Next Story