அழகர்கோயிலில் ரூ.64 லட்சம் பணம், 47 கிராம் தங்கம் வரவு

அழகர்கோயிலில் ரூ.64 லட்சம் பணம், 47 கிராம் தங்கம் வரவு

அழகர் கோயில் காணிக்கை

மேலூர் அருகே அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் உண்டியல் திறப்பு: பக்தர்களிடமிருந்து ரூபாய் 64 இலட்சம் மற்றும் 47 கிராம் தங்கம், 342 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் மாதாந்திர உண்டியல் திறப்பு, திருக்கோவில் துணை ஆணையர் கலைவாணன் தலைமையில் திருக்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டு பக்தர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற காணிக்கைகளை என்னும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பக்தர்களிடமிருந்து ரூபாய் 64 இலட்சத்து 18 ஆயிரத்து 355 ரொக்கமும். மற்றும் 47 கிராம் தங்க பொருட்களும், 342 கிராம் வெள்ளி பொருட்களும் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அவற்றை திருக்கோவில் நிர்வாக பதிவேட்டில் வரவு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் சுரேஷ், மேலூர் சரக ஆய்வாளர் அய்யம்பெருமாள், திருக்கோயில் அறங்காவலர்கள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி, கள்ளழகர் திருக்கோவில் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்..

Tags

Read MoreRead Less
Next Story