பாபநாசம்: அழகு காமட்சியம்மன் கோயில் திருவிழா

பாபநாசம்: அழகு காமட்சியம்மன் கோயில் திருவிழா

கோயில் திருவிழா

பாபநாசம் அழகு காமட்சியம்மன் ஆலய பால்குடம் திருவிழா நடைபெற்றது.

பாபநாசம் அருகே மதகரம் கிராமத்தில் மாந்தோப்பு மட்டையாயான்திடலில் அமைந்துள்ள அழகு காமாட்சி அம்மன் ஆலய பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அது சமயம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் இருந்து சக்தி கரகம், கருப்புசாமி அருவாள், அக்னி சட்டி, சூலம், பால்குடம் காவடி,அலகு காவடி எடுத்து வந்து அம்மனுக்குசிறப்பு அபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்றது.

மதியம் அன்னதானம் நடைபெற்றது இரவு அலகு காமாட்சி அம்மன் பூ அலங்காரத்துடன் வீதி உலா காட்சியும் முளைப்பாரியும் மங்கள இசை உடன் எடுத்துவரப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

Tags

Next Story