குன்னத்தூரில் அசோலா வளர்ப்பு செயல் விளக்க முகாம்
குன்னத்தூரில் அசோலா வளர்ப்பு செயல் விளக்க முகாம்
விராலிமலை வட்டார வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின் கீழ் அசோலா வளர்ப்பு குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் குன்னத்தூர் கிராமத்தில் நடந்தது. வட்டார வேளாண்மை அலுவலர் ஹீலா ராணி முகாமை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில் அசோலா நீர் நிலைகளில் மிதவை தாவரமாக வளரும் பேரணி வகையைச் சார்ந்தது. குறைந்த வருமானத்தில் அதிக லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்று அசோலா வளர்ப்பு குறைவான முதலீட்டில் பகுதி நேரமாக செய்து தினசரி வருமானம் பெறலாம் நெற்பயிருக்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கால்நடை மற்றும் கோழிகளுக்கு புரதச்சத்து தீவனமாக பயன்படுத்தி உற்பத்தி செலவை கணிசமாக குறைக்க முடியும் அசோலாவில் ஆறு வகைகள் உள்ளன. தமிழகத்தில் பரவலாக காணப்படுவது அசோலா பின்னோட்ட ரகம்தான் அதிக தழைச்சத்தை கிரகித்து அதிக வெப்ப நிலையை தாங்கி நன்கு வளரும் இயல்புடையது நிகழ்ச்சி ஏற்பாடுகளை அலுவலர் ரேவதி வட்டார தொழில் நுட்ப மேலாளர் லக்ஷ்மி பிரபா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆரோக்கியராஜ் உமா மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.