பாபநாசம் சந்தன காளியம்மன் கோவில் பால்குட திருவிழா

பாபநாசம் சந்தன காளியம்மன் கோவில் பால்குட திருவிழா

பால்குட ஊர்வலம்

பாபநாசம் சந்தன காளியம்மன் கோவில் பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சந்தன காளியம்மன் கருப்பு மதுரைவீரன் ஆலய 20-ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் பாபநாசம் பிள்ளையார் கோவில் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்து அடைந்தது 2_ நாள் பாபநாசம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பால்குடம் அலகு காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக தப்பாட்டத்துடன் கோவிலை வந்தடைந்தது மதியம் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இரவு குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் அரிவாள் அக்னிசட்டி எடுத்து தப்பாட்டம் வாண வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக கோவில் வந்து அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது இரவு சந்தன காளியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா காட்சி நடைபெற்றது. விழாவில் பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாட்டாண்மைகள் கிராமவாசிகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர்கள் பஞ்சாயத்தார்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

Tags

Next Story