120 அடியை தாண்டிய பாபநாசம் அணை நீர்மட்டம்
பாபநாசம் அணை
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்யாத நிலையில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. இவ்வாறு நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 10/12/23 காலை நிலவரம் படி 120.70 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த அணை நீர்மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Next Story