பாபர் மசூதி இடிப்பு தினம்: கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினம்: கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் ஆண்டுதோறும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கபட்டு வரப்படுகிறது.

இதையொட்டி தூத்துக்குடியில் இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாளில் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்கள் பாபர் மசூதியை போன்று அகற்றப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை கண்டித்தும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட பொறுப்பு குழு தலைவர் கயத்தார் அஸ்மத் உசேன் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜாபர் அலி, அகமது இக்பால், மோத்தி முசம்மில், செய்யது ஐதுரூஸ், ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோசப் நோலஸ்கோ, தலைமை பிரதிநிதி முகமது ஜெய்துல் அபிதீன், சிபிஎம் கட்சி சங்கரன், சிஏடியு மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், மதிமுக மாநகர செயலாளர் முருக பூபதி, தாயக மக்கள் கட்சி அகமது, பெரியார் மையக் காப்பாளர் பால் ராஜேந்திரன், திராவிட விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் உடன்குடி ஆசாத், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரி செல்வம், கிறிஸ்துவ வாழ்வுரிமை இயக்கம் ஜான் ராயன், மாநகர பொறுப்பு குழு தலைவர் மெட்ரோ ஷேக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story