பாபர் மசூதி இடிப்பு தினம்- கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம்- கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை 

கோவை:பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 நாடு முழுவதும் கருப்பு தினமாக இஸ்லாமிய அமைப்பினர் அனுசரித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக உக்கடம், காந்திபுரம்,சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையம்,ரயில் நிலையம்,விமான நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தபட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் ரயில் நிலைய நடைபாதை மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. கோவை மாநகர் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story